தெலுங்கு பிக் பாஸை அதிர வைத்த விஜய் சேதுபதி… அரங்கமே அதிர்ந்த தருணம்
பிக்பாஸ் சீசன் 9 தமிழ் மொழியில் மட்டும் இல்லை, தெலுங்கிலும் தொடங்கி சென்றுகொண்டு இருக்கின்றது.
இதில் தமிழ் சீசன் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே தெலுங்கு சீசன் தொடங்கி விட்டது. தெலுங்கில் நாகர்ஜூனாதான் பிக் பாஸை தொகுத்து வழங்குகின்றார்.
இப்படி இருக்கும்போது தெலுங்கு சீசனில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நடிகை ஆயிஷா களமிறங்கியுள்ளார்.
இதில் என்ன விஷயம் என்றால், தெலுங்கு பிக்பாஸில் சர்ப்ரைஸாக வந்த விஜய் சேதுபதிதான்.
தமிழ் பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் மற்றைய மொழிகளிலும் பிக்பாஸில் கலந்துகொண்டு டைட்டிலும் வென்றுள்ளார்கள்.
அந்த வகையில் தமிழ் பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளராக வந்த ஆய்ஷாவுக்கு தற்போது தெலுங்கு பிக்பாஸில் போட்டியாளராக களமிறங்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதுவும் வைல்ட் கார்ட் போட்டியாளராக களமிறங்குகிறார் ஆயிஷா. இந்நிலையில் இவருக்கு சிறப்பு பவர் ஒன்றைக் கொடுத்து வீட்டிற்குள் அனுப்பி உள்ளார்கள்.
இந்த சிறப்பு பவரை அவருக்கு கொடுத்தவர் தமிழ் பிக்பாஸை தொகுத்து வழங்கி வரும் விஜய் சேதுபதிதான். அதாவது இவருக்கு, Power Of Nomination என்ற பவரைக் கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.






