அண்டார்டிகாவின் பல பகுதிகளில் பறவைக் காய்ச்சல் – பேரழிவை ஏற்படுத்தும் அபாயம்
அண்டார்டிகாவின் பல பகுதிகளில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பெங்குவின் மற்றும் கடல் சிங்கங்களுக்கு H5N1 வைரஸ் பரவி வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
H5N1 வைரஸ் அண்டார்டிகா முழுவதும் பரவும் அபாயம் உள்ளதாகவும் அச்சம் நிலவுகிறது.
இதை கண்காணித்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பறவைக் காய்ச்சல் என்பது பறவைகளிடையே பரவும் ஒரு வைரஸ் ஆகும்.
இது மனிதர்களை பாதித்து, மனிதர்களிடையே பரவினால், அது பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
(Visited 7 times, 1 visits today)