வெடித்து சிதறிய அமெரிக்காவின் கிளாயுவா எரிமலை..!
அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள கிலாவியா எரிமலை வெடித்து எரிமலைக் குழம்புகளை கக்கி வருகிறது.
உலகில் எந்நேரமும் சீற்றத்துடன் காணப்படும் எரிமலைகளில் கிளாயுவா எரிமலையும் ஒன்றாகும்.
இந்த எரிமலை 2019 இல் வெடித்தபோது, அதிக சேதம் ஏற்பட்டதுடன் பல வீடுகள் பாதிக்கப்பட்டன.
இறுதியாக, கடந்த ஜனவரி மாதம் கிளாயுவா எரிமலை வெடித்தது. அதன்பிறகு சீற்றம் தணிந்து காணப்பட்டது.
தற்போது மீண்டும் எரிமலை வெடித்துள்ளது. இதன் காரணமாக எரிமலையின் பகுதி முழுவதும் தீப்பிழம்பு போல் காட்சியளிக்கிறது.





