ஆன்லைனில் இடம்பெறும் தீங்கிழைக்கும் சம்பவங்களில் இருந்து பாதுகாக்க ஆஸ்திரேலியா முன்வைக்கும் யோசனை!
கொடுமைப்படுத்துதல், கொள்ளையடிக்கும் நடத்தை மற்றும் அழிவுகரமான உள்ளடக்கத்தைத் தூண்டும் பயனர்களை தடுக்க புதிய சட்ட திருத்தங்களை ஆஸ்திரேலிய அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
இதன்படி “The Digital Duty of Care என்ற உள்ளடக்கம் ஆஸ்திரேலியர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், ஆன்லைன் தீங்குகளைத் தடுக்கவும் உதவும் என தகவல் தொடர்பு அமைச்சர் மிச்செல் ரோலண்ட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
X, Instagram, Facebook மற்றும் TikTok உள்ளிட்ட தளங்களில் இருந்து 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தடை செய்யும் உலகின் முதல் சட்டத்தை அரசாங்கம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்நிலையிலேயே புதிய விதிமுறைகள் முன்மொழியப்பட்டுள்ளன.
கொடுமைப்படுத்துதல் மற்றும் எதிர்மறையான உடல் உருவங்களை வெளிப்படுத்துதல் போன்ற காரணங்களால் குழந்தைகள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வதற்கும், இன்னும் பிற துன்பங்களை அனுபவிப்பதற்கும் சமூக ஊடக தளங்கள் பங்களிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.