ஆஸ்திரேலியா

ஆக்கஸ் ஒப்பந்தம் குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ள ஆஸ்திரேலியாவின் அல்பனிஸ்

பிரிட்டனும் அமெரிக்காவும் ஆக்கஸ் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியாவுடன் செய்துகொள்ளவிருப்பதாக ஜி7 உச்சநிலை மாநாட்டில் கூறப்பட்ட கருத்துகளை ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் வரவேற்றுள்ளார்.

“நாங்கள் அதைச் செய்யவிருக்கிறோம். அது எங்கள் இருவருக்கும் முக்கியமான ஒப்பந்தம்,” என்று பிரிட்டி‌ஷ் பிரதமர் கியர் ஸ்டார்மர் ஆக்கஸ் குறித்து கேட்ட கேள்விக்குப் பதிலளித்தார்.அதிபர் அதை மறுஆய்வு செய்வதாகவும் சொன்ன அவர், அரசாங்கத்துக்கு வந்த பிறகு நாங்கள் மறுஆய்வு செய்தோம். எனவே அது நல்லது என்று நினைக்கிறேன் என்றார்.

ஆக்கஸ் உடன்பாட்டுக்கு ஆதரவு திரட்ட டிரம்ப்புடன் முதல் கூட்டத்தைத் அல்பனிஸ் நடத்தவிருந்தார். இருப்பினும் டிரம்ப் ஜி7 மாநாட்டிலிருந்து முன்கூட்டியே புறப்பட்டதால் கூட்டம் நடைபெறுவதாகத் தெரியவில்லை என்று ஆஸ்திரேலிய அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

“மத்திய கிழக்கில் நடைபெறுவதைப் பார்த்தால் அதைப் புரிந்துகொள்ள முடிகிறது,” என்று அல்பனிசின் பேச்சாளர் அறிக்கையில் குறிப்பிட்டார்.

ஆக்கஸ் உடன்பாடு மூன்று தரப்பினருக்கும் பெரிய அனுகூலங்கள் இருப்பதாகத் அல்பனிஸ் முன்னதாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.“எனவே நாங்கள் ஆக்கஸ் உடன்பாட்டை ஆதரிக்கிறோம். மூன்று நாடுகளும் உடன்பாட்டுக்குத் தொடர்ந்து ஆதரவு தரும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது,” என்று அல்பனிஸ் கூறினார்.

2023ஆம் ஆண்டு இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் சீனாவை எதிர்க்க 2030ஆம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி ஆற்றலுடன் தாக்குதல் நடத்தக்கூடிய நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்க வகைசெய்யும் முழுமையான விவரங்களை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் வெளியிட்டன.

அது, அமெரிக்காவுக்கு முதலிடம் கொடுக்கும் அதிபர் டிரம்ப்பின் கொள்கையுடன் ஒத்துப்போகிறதா என்று அரசாங்கம் மறுஆய்வு செய்வதாக அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு கடந்த வாரம் கூறியது.

(Visited 1 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித