ஆஸ்திரேலியா செய்தி

எரிபொருள் நெருக்கடி: ஆஸ்திரேலியாவில் பொது போக்குவரத்து இலவசம்!

ஆஸ்திரேலியாவில் நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வால் மக்கள் பெரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாற்று வழிகள் கையாளப்பட்டுவருகின்றது.

குறிப்பாக பெட்ரோல் விலை 85 சதவீதம் வரை அதிகரித்துள்ளதால், பொதுமக்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் விக்டோரியா Victoria மாநில அரசு, ஏப்ரல் மாதம் முழுவதும் இலவச பொதுப் போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படும் என அறிவித்துள்ளது.

இந்த முயற்சியின் மூலம் மக்கள் எரிபொருள் நுகர்வைக் குறைத்து, பேருந்து மற்றும் ரயில்களை அதிகமாகப் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே குயின்ஸ்லாந்து Queensland மாநிலத்தில் குறைந்த கட்டண முறை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், விக்டோரியாவின் இந்த இலவசப் பயணம் தற்காலிக நிவாரணமாக கருதப்படுகின்றது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!