ஆஸ்திரேலியா

விவசாயச் சட்டங்களை எதிர்த்து நாடாளுமன்றத்தில் இறந்த சால்மன் மீனை ஏந்தியபடி வாதிட்ட ஆஸ்திரேலிய செனட்டர்

ஆஸ்திரேலியாவின் உத்தேச மீன்பண்னைச் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்றத்தில் பெரிய சால்மன் மீன் ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தூக்கிக் காண்பித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிரீன் அரசியல் கூட்டணியைச் சேர்ந்த சாரா ஹான்சன்-யங் எனப்படும் அந்தப் பெண் உறுப்பினர், அரசாங்கத்தின் உத்தேச மீன்பண்ணைச் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.

நச்சுத்தன்மை வாய்ந்த, மாசுபடுத்தும் சால்மன் மீன் தொழிலை ஆதரிப்பதற்காக சுற்றுச்சூழல் பாதுகாப்பை அரசாங்கம் விட்டுத்தருகிறதா என்று அவர் புதன்கிழமை (மார்ச் 26) மன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

சுற்றுச்சூழல் அமைச்சரைப் பிரதிநிதித்து நாடாளுமன்றத்தில் அமர்ந்திருந்த ஜென்னி மெக்அலிஸ்டரை நோக்கி, பிளாஸ்டிக் பைக்குள் அடைக்கப்பட்ட, உயிரிழந்த பெரிய சால்மன் மீன் ஒன்றை எடுத்துக் காட்டினார்.

தாஸ்மானிய மாநிலத்தில் மரபுடைமைப் பட்டிலில் இடம்பெற்று உள்ள, சர்ச்சைக்குரிய சால்மன் பண்ணையைப் பாதுகாக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் சட்டம் கொண்டு வர உத்தேசித்து உள்ளது.

எதிர்வரும் மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக அதற்கான சட்டத்திற்கு நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற அரசாங்கம் முயன்று வருகிறது.

அதனைச் சுட்டிக்காட்டிப் பேசிய திருவாட்டி சாரா, “தேர்தல் நெருங்கும் வேளையில் அழுகிய, நாற்றமெடுக்கும் சால்மன் மீனுக்காக அரசாங்கம் சுற்றுச்சூழல் நற்பெயரை விற்றுவிட்டதா,” என்று கடுமையாகக் கூறினார்.

(Visited 47 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித