அவுஸ்திரேலிய செனெட்டருக்கு எதிராக பெண் செனெட்டர் பாலியல் வன்முறை குற்றச்சாட்டு
அவுஸ்திரேலிய லிபரல்கட்சியின் செனெட்டர் டேவிட் வன் தன்னை செனெட்டில் பாலியல் வன்முறைக்குட்படுத்தினார் என செனெட்டர் லிடியா தோர்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
செனெட்டர் வன் வன்முறைகள் குறித்து உரையாற்றி;க்கொண்டிருந்த லிடியா தோர்ப் அவருக்கு எதிராக இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
குற்றமிழைத்த ஒருவர் வன்முறை குறித்து பேசுவது எனக்கு மனக்குழப்பத்தை ஏற்படுத்துகின்றது இந்த நபர் என்னை துன்புறுத்தியுள்ளார் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியுள்ளார் என லிடியா தோர்ப் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அவரை நீக்கவேண்டும்,இவர் இவ்வகையான வன்முறைகள் குறித்து பேசுவது மிகவும் அவமானகரமான விடயம் என லிடியா தோர்ப் தெரிவித்துள்ளார்.
எனினும் விக்டோரியாவை சேர்ந்த லிபரல் செனெட்டர் வென் இதனை உடனடியாக நிராகரித்தார்.
(Visited 11 times, 1 visits today)





