பொதுத் தேர்தலை நடத்த திட்டமிடும் ஆஸ்திரேலிய பிரதமர்
புதிய நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான மே 17 ஆம் தேதி காலக்கெடு நெருங்கி வருவதால், தேசியத் தேர்தலை உடனடியாக நடத்த திட்டமிட்டுள்ளதாக ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
“தேர்தல் மே மாதத்தில் நடக்கும், நான் அதற்கு உத்தரவாதம் அளிக்க முடியும். மிக விரைவில் அழைக்கப்படும்” என்று அல்பானீஸ் வானொலி நிலையமான டிரிபிள் எம்க்கு தெரிவித்தார்.
பிரதமர் அல்பானீஸ் கான்பெராவில் உள்ள கவர்னர் ஜெனரல் சாம் மோஸ்டினைச் சந்தித்து தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை அறிவிக்க, இங்கிலாந்து மன்னர் சார்லஸை பிரதிநிதித்துவப்படுத்தும் கவர்னர் ஜெனரலான மோஸ்டினின் அங்கீகாரத்தை அல்பானீஸ் பெற வேண்டும்.





