உலகம்

அத்துமீறிய ஆஸ்திரேலிய விமானம்: சீனா கொதிப்பு!

ஆஸ்திரேலியா தமது நாட்டின் இறையாண்மையை கடுமையாக மீறியுள்ளது என்று சீனா குற்றஞ்சாட்டியுள்ளது

‘ஜிஷா தீவுகள் வழியாக ஆஸ்திரேலிய கண்காணிப்பு விமானம் சீன வான்வெளிக்கும் அத்துமீறி நுழைந்தது” எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், தென்சீனக் கடல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலியாவின் கண்காணிப்பு விமானத்துக்கு அருகில் சீன விமானம் ஆபத்தான முறையில் தீப்பிழம்புகளை வெளியிட்டது என ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ்(Richard Marles) தெரிவித்தார்

இச்சம்பவத்தால் ஆஸ்திரேலிய படையினர் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற போதிலும், இந்த சூழ்ச்சி நடவடிக்கையானது படையினருக்கு ஆபத்தை ஏற்படுத்தியது என ஆஸ்திரேலிய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

இந்நிலையிலேயே சீனா மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

‘ஆஸ்திரேலியா அதன் அத்துமீறல் மற்றும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.” எனவும் சீனா வலியுறுத்தியுள்ளது.

தென்சீனக் கடல் பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு சீனா கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுவருகின்றது. அப்பகுதியில் சர்வதேச வான் பரப்பில் ஆஸ்திரேலியா கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது வழமை. அந்த வகையிலேயே கண்காணிப்பு இடம்பெற்றது என பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

(Visited 5 times, 5 visits today)

Mithu

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்