செய்தி விளையாட்டு

2025/26ம் ஆண்டின் ஆஷஸ் தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பிரபல ஆஷஸ்(Ashes) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில், சிட்னி(Sydney) மைதானத்தில் ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது.

முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 97.3 ஓவர்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 384 ஓட்டங்களை பெற்றது.

அதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரமிப்பித்த ஆஸ்திரேலிய அணி 133.5 ஓவர்களுக்கு 567 ஓட்டங்கள் குவித்தது.

தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரமிப்பித்த இங்கிலாந்து அணி 342 ஓட்டங்கள் குவித்து ஆஸ்திரேலிய அணிக்கு 160 ஓட்ட இலக்கை நிர்ணயித்தது.

இந்நிலையில், 160 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 31.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 161 ஓட்டங்கள் பெற்று தொடரை கைப்பற்றியது.

இறுதியில், போட்டியின் ஆட்ட நாயகன் விருதை டிராவிஸ் ஹெட்(Travis Head) மற்றும் தொடரின் நாயகன் விருதை மிச்சேல் ஸ்டார்க்(Mitchell Starc) கைப்பற்றினர்.

மேலும், இந்த தொடரின் முடிவில் ஆஸ்திரேலியாவின் துடுப்பாட்ட வீரர் உஸ்மான் கவாஜா(Usman Khawaja) டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!