200 குரூஸ் ஏவுகணைகளை வாங்கும் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய போர்க்கப்பல்களுக்கு நீண்ட தூர கடற்படை தாக்குதல்களுக்காக 1.3 பில்லியன் டொலர் மதிப்பிலான 200 குரூஸ் ஏவுகணைகளை வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இந்த Tomahawk வகை ஏவுகணைகள் 1500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்டவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் தற்போதைய ஏவுகணைகள் அதிகபட்சமாக 300 கிலோ மீற்றராகும்.
இதன் கீழ் வான் மற்றும் கடல் அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து பதிலளிப்பது தொடர்பான புதிய ரேடார் அமைப்பும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மேலும், 431 மில்லியன் டொலர் மதிப்பிலான 60 கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணைகளையும், டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் உட்பட 50 மில்லியன் டொலர் மதிப்பிலான ராணுவ வாகனங்களையும் வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே இந்தக் கொள்வனவுகளின் நோக்கம் என பாதுகாப்புப் படைகள் வலியுறுத்துகின்றன.