ஆஸ்திரேலியா செய்தி

போண்டி கடற்கரை துப்பாக்கிச் சூடு ; ஆஸ்திரேலிய அரசு அதிரடி விசாரணை

சிட்னியின் போண்டி (Bondi) கடற்கரையில் கடந்த மாதம் யூத பண்டிகையின் போது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் குறித்து, நாட்டின் உயரிய அதிகாரமிக்க ‘ரோயல் கமிஷன்’ (Royal Commission) விசாரணைக்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸி (Anthony Albanese) உத்தரவிட்டுள்ளார்.

15 பேர் கொல்லப்பட்ட இந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து, மக்கள் மற்றும் யூத அமைப்புகளின் கடும் அழுத்தத்திற்குப் பிறகு இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.

முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி வர்ஜீனியா பெல் ( Virginia Bell) தலைமையில் அமையவுள்ள இந்த ஆணையம், நாட்டில் வளர்ந்து வரும் யூத எதிர்ப்பு உணர்வுகள் மற்றும் இந்தத் தாக்குதலுக்கான பின்னணி குறித்து விரிவாக விசாரிக்கும்.

இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இதன் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

சமூக ஒற்றுமையை நிலைநாட்டவும், இதுபோன்ற தீவிரவாதச் செயல்களைத் தடுக்கவும் இந்த விசாரணை மிக அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!