ஆஸ்திரேலியா வெள்ளப் பெருக்கு உயரும் என எச்சரிக்கை : 300 பேர் வெளியேற்றம்!
வடகிழக்கு ஆஸ்திரேலியாவில் திடீர் வெள்ளம் காரணமாக ஏறக்குறை 300 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதலைகள் நகருக்குள் புகுந்தமையால் மக்கள் அச்சத்தில் பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவ இராணுவ ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டன என்று போலீசார் தெரிவித்தனர்.
குயின்ஸ்லாந்து பொருளாளர் கேமரூன் டிக், வெளிவரும் பேரழிவு மாநிலத்தில் “பில்லியன் டாலர் தாக்கத்தை” ஏற்படுத்தும் என்றார்.
இதேவேளை திங்கட்கிழமை பிற்பகல் வெள்ள நீர் மீண்டும் உயரும் முன் பாதுகாப்பான இடத்திற்கு மக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
(Visited 6 times, 1 visits today)