ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவுக்கு காட்டுத்தீ அபாயம் – உடனடியாக வெளியேறுமாறு மக்களுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியா – பெர்த் நகரில் வடக்கு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு காட்டுத்தீ அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Wedge Island மற்றும் Cooljarloo ஆகிய பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவசர சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இன்னும் அவசர எச்சரிக்கைகளுக்கு செவிசாய்க்காத மக்கள் மீண்டும் அது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த பகுதிகளில் உள்ள மக்களின் உயிருக்கும், வீடுகளுக்கும் அச்சுறுத்தல் உள்ளதால், கூடிய விரைவில் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதால், காட்டுத் தீ ஏற்படும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள பல சாலைகள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டன, மேலும் அவர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை தங்கள் வீடுகளில் இருந்து அழைத்துச் செல்லுமாறு கூறப்பட்டுள்ளனர்.

(Visited 46 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி