ஆஸ்திரேலியா கடற்கரை துப்பாக்கி சூடு – தாக்குதல் நடந்த இடத்தில் இருந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்
கடந்த வாரம் சிட்னியின்(Sydney) பாண்டியில்(Bondi) பயங்கரவாதத் தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகில் இங்கிலாந்து(England) கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன்(Michael Vaughan) இருந்ததாக தெரிவித்துள்ளார்.
மைக்கேல் வாகன் ஆஸ்திரேலியாவில் ஆஷஸ்(Ashes) தொடர் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற போது தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த மைக்கேல் வாகன், தானும் தனது குடும்பத்தினரும் “தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து சில நூறு மீட்டர் தொலைவில்” இருந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த அனுபவத்தை “பயங்கரம்” என்று விவரித்த வாகன், துப்பாக்கி சூடு சத்தம் கேட்கும் அளவுக்கு நெருக்கமாக இருப்பது பயங்கரமானது” என்று குறிப்பிட்டுள்ளார்.
டிசம்பர் 14ம் திகதி ஆஸ்திரேலியாவின்(Australia) புகழ்பெற்ற போண்டி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒரு குழந்தை உட்பட 27 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





