ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆஸ்திரேலியாவும் ஆதரவு!
ஈரான் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவும் இணைந்துள்ளது.
அடக்குமுறை ஆட்சிக்கு எதிரான ஈரான் மக்களின் துணிச்சலான போராட்டத்திற்கு ஆஸ்திரேலியா துணை நிற்கின்றது என்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் Benny Wong அறிவித்துள்ளார்.
ஈரான் அரசாங்கம் அதன் சொந்த மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ள அடக்குமுறையை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
போராட்டக்காரர்;கள் கொலை செய்யப்படுவதும், கைது செய்யப்படுவதும் உடன் நிறுத்தப்பட வேண்டும்.” – எனவும் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், ஈரானில் தங்கியுள்ள ஆஸ்திரேலியர்கள் உடன் வெளியேற வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.
அதேவேளை, ஆஸ்திரேலியாவில் யூத எதிர்ப்பு தாக்குதல் சம்பவங்களுக்கு பின்னணியில் ஈரான் இருப்பதாக சில மாதங்களுக்கு முன்னர் அந்நாட்டு உளவுப் பிரிவு எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து ஈரான் தூதுவரை ஆஸ்திரேலியா வெளியேற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.





