குழந்தைகளுக்கான சமூக ஊடகத் தடையில் மேலும் இரண்டு செயலிகளை சேர்த்த ஆஸ்திரேலியா
அடுத்த மாதம் தொடங்கும் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆஸ்திரேலியாவின் உலகின் முதல் சமூக ஊடகத் தடையில் மேலும் இரண்டு செயலிகள்(Apps) சேர்க்கப்பட்டுள்ளது.
நேரடி ஒளிபரப்பு தளமான கிக்(Kick) மற்றும் விவாத செயலி ரெடிட்(Reddit) ஆகியவை தற்போது சேர்க்கப்பட்டு தடை செய்யப்பட்ட தளங்களின் எண்ணிக்கை ஒன்பது ஆகக் உயர்ந்துள்ளது.
அவற்றில் பேஸ்புக்(Facebook), எக்ஸ்(X), ஸ்னாப்சாட்(Snapchat), டிக்டோக்(TikTok), யூடியூப்(YouTube), இன்ஸ்டாகிராம்(Instagram) மற்றும் திரேட்ஸ்(Threads) ஆகியவை அடங்கும்.
இந்நிலையில், வேகமாக மாறி வரும் தொழில்நுட்பத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு வரும் காலங்களில் பல தளங்கள் சேர்க்கப்படலாம் என்று அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், டிசம்பர் 10 முதல் அமுலாகும் இந்த தடையில் 16 வயதுக்குட்பட்ட ஆஸ்திரேலியர்கள் கணக்கை வைத்திருப்பதைத் தடுக்க நியாயமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறும் எந்தவொரு தளம் மீதும் $49.5 மில்லியன் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.





