ஐரோப்பா

பிரித்தானியாவில் ரயில் சேவைகளை தேசியமயமாக்க முயற்சி!

பிரித்தானியாவில் வரும் 2025 ஆம் ஆண்டு 03 ரயில் நிறுவனங்கள் மீண்டும் தேசியமயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தென்மேற்கு ரயில்வே மே 2025-லும், C2C ஜூலை 2025-லும், கிரேட்டர் ஆங்கிலியா இலையுதிர் காலத்திலும் தேசியமயமாக்கப்படும் என போக்குவரத்துத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

ரயில் ஆப்ரேட்டர்களின் ஒப்பந்தங்கள் நிறைவடையும் நிலையில், சேவைகளை தேசியமயமாக்கும் தொழிலாளர் கட்சியன் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட பயணிகள் ரயில் சேவைகள் (பொது உரிமை) சட்டம் ரயில் ஒப்பந்தங்களை ஐந்தாண்டுகளில் மீண்டும் பொது உடைமையாக்கும் கோட்பாடுகளை முன்வைக்கின்றது.

தற்போது தனியார் நிறுவனங்கள் வைத்திருக்கும் சேவை ஒப்பந்தங்கள் வரும் ஆண்டுகளில் காலாவதியாகும் நிலையில், கிரேட் பிரிட்டிஷ் ரயில்வே (ஜிபிஆர்) என்ற புதிய அமைப்பு ஒன்றையும் அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!