ISIS அமைப்பினரின் ஆயுத தளத்தை குறிவைத்து தாக்குதல் – பிரித்தானியா, பிரான்ஸ் கூட்டு நடவடிக்கை!
சிரியாவில் உள்ள நிலத்தடி தளத்தை குறிவைத்து பிரெஞ்சு படைகளுடன் இணைந்து பிரித்தானியா நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது.
ISIS அமைப்பினரின் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை சேமித்து வைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட நிலத்தடி தளத்தின் மீதே மேற்படி தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி தளத்தை சுற்றி பொதுமக்கள் யாரும் வசிக்கவில்லை என்றும் நீண்டகாலமாக இது ஆயுத சேமிப்பு கிடங்காக பயன்படுத்தப்பட்டு வந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும், அனைத்து விமானங்களும் பணியில் இருந்து பாதுகாப்பாக திரும்பியுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்பு செயலாளர் ஜோன் ஹீலி (ohn Healey), இங்கிலாந்தின் தலைமையையும், ஆயுதப்படைகளின் தொழில்முறை மற்றும் துணிச்சலையும் பாராட்டினார்.
“கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நாட்களில் நிறுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் பணியாளர்களில் அவர்களும் அடங்குவர். நமது வாழ்க்கை முறையை அச்சுறுத்தும் ஆபத்தான பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கான இந்த நடவடிக்கை, ஆண்டு முழுவதும் பிரித்தானியாவை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வலுவாக வைத்திருக்க நமது ஆயுதப்படைகள் எவ்வாறு தயார் நிலையில் உள்ளன என்பதைக் காட்டுகிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.





