வெனிசுலா மீதான தாக்குதல் – ஐ.நாவின் விரைவான பதிலை கோரும் பிரேசில்!
பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா (Luiz Inacio Lula da Silva), வெனிசுலா மீதான அமெரிக்க இராணுவத் தாக்குதலையும், ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் (Nicolas Maduro) கைது நடவடிக்கையையும் கடுமையாக கண்டித்துள்ளார்.
ட்ரம்பின் நடவடிக்கை வெனிசுலாவின் இறையாண்மைக்கு கடுமையான அவமானம் எனக் கூறிய அவர், ஐ.நா சபையின் தீவிரமான பதிலையும் கோரியுள்ளார்.
இதேவேளை வெனிசுலாவின் தற்போதைய நிலைமை குறித்து விவாதிக்க பிரேசில் அதிகாரிகள் அவசர அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தியுள்ளனர். வெளியுறவு அமைச்சர் தனது வெனிசுலா பிரதிநிதியுடன் பேசியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.





