இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் வீட்டின் மீது தாக்குதல்!
																																		களனியிலுள்ள இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் வீட்டின் மீது இனம்தெரியாத சிலர் நேற்று (18) தாக்குதல் நடத்தியுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
களனி சரத்சந்திர டயஸ் மாவத்தையில் அமைந்துள்ள வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதலில், வீட்டின் சொத்துக்களுக்கு சேதமேற்பட்டள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து சபுகஸ்கந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தாக்குதல் சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரனவீர, மே தாக்குதலின் போது ஹுணுப்பிட்டிய விலிருந்த எனது வீடு தீக்கிரையாக்கப்பட்டது.
அதன் பின்னர் மாலபே பகுதியிலுள்ள என்னுடைய தந்தையின் வீட்டில் தங்கியிருந்தோம். இந்த வீடும் எனக்கு சொந்தமானது. இருப்பினும் நேற்று முன்தினம் இரவு இந்த வீட்டின் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக தாக்கப்பட்ட எனது வீட்டுக்கு இன்றளவிலும் நட்டயீடு வழங்கப்படவில்லை. வீட்டுக்கு வருகை தந்தவர்கள் எனது பெயரையும், என்னுடைய மகனுடைய பெயரையும் அழைத்து கூச்சலிட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
        



                        
                            
