நீதிமன்ற அழைப்பாணை வழங்கச் சென்ற பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்
ஹோமாகம பனாகொட, கெரமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு அழைப்பாணை வழங்குவதற்காக சென்ற அத்துருகிரிய பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிய குற்றச்சாட்டில் இராணுவ உறுப்பினர் உட்பட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை வழக்கு தொடர்பாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பாணையை கையளிப்பதற்காக குறித்த உத்தியோகத்தர் வீட்டுக்குச் சென்ற போது தாக்குதல் நடத்திய இருவரும் மது அருந்திக்கொண்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த அழைப்பாணையை ஒப்படைக்குமாறு பொலிஸ் உத்தியோகத்தரிடம் கேட்டபோது, பொலிஸ் உத்தியோகத்தரின் அந்தரங்க உறுப்புகளில் தாக்கப்பட்டதாகவும், அதன் காரணமாக அதிகாரி அத்துரிகிரிய ஒருவல பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.