உக்ரைனில் வர்த்தக நிலையம் மீது தாக்குதல்: குழந்தை உட்பட 48 பேர் பலி
குபியன்ஸ்க் அருகே உள்ள மளிகைக் கடையில் ரஷ்ய பீரங்கித் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 49 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைனின் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் குபியன்ஸ்க் மாவட்டத்தில் உள்ள ஹ்ரோசா கிராமத்தில் உள்ள உணவகம் மற்றும் கடை மீது ரஷ்யப் படைகள் ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் 6 வயது சிறுவன் உட்பட 48 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இடிபாடுகளில் இருந்து இதுவரை 6 வயது சிறுவன் உட்பட 48 பேரின் உடல்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் கார்கிவ் பிராந்திய இராணுவ நிர்வாகத் தலைவர் ஓலே சினிஹுபோவ் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு குழந்தை உட்பட 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கிராமடோர்ஸ்க் ரயில் நிலையம் மீதான தாக்குதலுக்குப் பிறகு உக்ரைனில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுவாகும்.
என்ன ஆயுதம் பயன்படுத்தப்பட்டது என்பது தெரியவில்லை. உக்ரேனிய அதிகாரிகள் தாக்குதலை விவரிக்க வெவ்வேறு சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
ஸ்பெயினுக்கு விஜயம் செய்துள்ள உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, இந்த தாக்குதல் ஒரு காட்டுமிராண்டித்தனமான ரஷ்ய குற்றத்தை நிரூபித்துள்ளது என்றும், சாதாரண மளிகைக் கடை மீது நடத்தப்பட்ட தாக்குதல் முற்றிலும் திட்டமிட்ட பயங்கரவாதத் தாக்குதல் என்றும் கூறினார்.