உலகம் செய்தி

ஈரானில் மிகப்பெரிய எரிவாயு வயல்மீது தாக்குதல்!

மத்திய கிழக்கு போர் இன்று 29 ஆவது நாளாக தொடரும் நிலையில், இரு தரப்புகளுமே தீவிர தாக்குதல்களை தொடுத்துவருகின்றன.

இந்நிலையில் ஈரானின் எரிசக்தி உற்பத்தி மையமாகக் கருதப்படும் தெற்கு புஷேர் மாகாணத்தின் அசலூயே பகுதியில் அமைந்துள்ள தெற்கு பார்ஸ் எரிவாயு வயல்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.

தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரப் போராடி வருகின்றனர்.

ஈரானின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி வசதிகள் தாக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன்னர், கார்க் தீவில் உள்ள எண்ணெய் முனையம் குறிவைக்கப்பட்டது. ஆனால் அங்கு ராணுவ கட்டமைப்புகள் மட்டுமே தாக்கப்பட்ட நிலையில் தற்போதைய தாக்குதல் எரிசக்தி கட்டமைப்புகள் மீது நிகழ்ந்துள்ளது.

ஈரான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் பகிர்ந்து கொள்ளும் தெற்கு பார்ஸ் எரிவாயு வயல், உலகின் மிகப்பெரிய எரிவாயு இருப்பாகும். இது சுமார் 9,700 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது.

இது ஈரானின் பொருளாதாரத்திற்கு மிகவும் இன்றியமையாதது. 2025 ஆம் ஆண்டில், இது ஒரு நாளைக்குச் சுமார் 730 மில்லியன் கன மீட்டர் எரிவாயுவை உற்பத்தி செய்து, நாட்டின் எரிசக்தித் தேவைகளின் பெரும்பகுதியைப் பூர்த்தி செய்தது.

இந்த எரிவாயு வயல் ஈரானின் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், துருக்கி மற்றும் ஈராக் போன்ற நாடுகளுக்கும் குழாய்கள் மூலம் விநியோகம் செய்கிறது.

எனவே, இந்த வயல் மீதான தாக்குதல் ஈரானின் எரிசக்தி விநியோகம் மற்றும் வருவாயை நேரடியாக பாதிக்கக்கூடும்.
மேற்படி தாக்குதலுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!