டென்மார்க் பிரதமர் மீது தாக்குதல் – நிலைத்தடுமாறி விழுந்ததாக தகவல்

டென்மார்க் பிரதமர் Mette Frederiksen தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
அந்தச் சம்பவம் தலைநகர் கோபன்ஹேகனில் பகுதியில் நடந்தது. அவரைத் தாக்கிய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பிரதமரை நோக்கி வேகமாக வந்த அந்த ஆடவர் அவரது தோளை இடித்துத் தள்ளினார்.
பிரதமர் நிலைத்தடுமாறி விழுந்தார் என்று சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் கூறுகின்றனர்.
தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. விசாரணை நடைபெறுவதால் மேற்கொண்டு விவரங்களை வெளியிட முடியாது என்று பொலிஸார் கூறியுள்ளனர்.
(Visited 57 times, 1 visits today)