இலங்கை

இலங்கையில் காதலன் மீது கோபத்தில் காதலியின் விபரீத செயல்

கண்டியில் இருந்து பதுளை நோக்கி சென்ற இலக்கம் 20 சரக்கு ரயிலின் முன் பாய்ந்து யுவதியொருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

இன்று காலை உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலவாக்கலை டயகம பிரதேசத்தை சேர்ந்த கணபதி அனுஷா தர்ஷனி எனும் 28 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த யுவதி ஹட்டன் நகரிலுள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருவதாகவும் ஹட்டன் பொன்னகர் பிரதேசத்தில் வசிக்கும் இளைஞன் ஒருவருடன் ஐந்து வருடங்களாக காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

பதுளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ரயிலில் மல்லியப்பு சந்திப் பகுதியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்நிலையில், யுவதியின் சடலம் காதலனால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா-கிளங்கன் ஆரம்ப வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்