கடுமையான குளிர்கால புயல் – காசாவில் பலஸ்தீனியர்கள் ஐவர் உயிரிழப்பு
இஸ்ரேலிய தாக்குதல்களால் சேதமடைந்த கட்டிடங்களைத் தாக்கிய கடுமையான குளிர்கால புயலால், காசாவில் சுமார் ஐந்து பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறைந்த அழுத்த நிலை காரணமாக கடும் குளிர், பலத்த மழை மற்றும் காற்று வீசியதாக சிவில் பாதுகாப்பு மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த கடும் குளிரால் ஒரு வயது குழந்தை உட்பட பலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் போதுமான வசதிகள் இல்லாத தற்காலிக தங்குமிடங்களில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





