தாய்லாந்தில் கோர விபத்து: 22 பேர் பலி! 80 பேர் காயம்!!
தாய்லாந்தின் Thailand வடகிழக்கு பகுதியில் ரயில்மீது கட்டுமானப் பணிக்காக பயன்படுத்தப்பட்ட பாரிய கிரேன் crane விழுந்ததில் குறைந்தபட்சம் 22 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 80 பேர் காயமடைந்துள்ளனர்.
பாங்காக்கிலிருந்து Bangkok 230 கிலோமீற்றல் தொலைவில் உள்ள, சீகியோ மாவட்டத்தில் உள்ளூர் நேரப்படி இன்று புதன்கிழமை காலையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
அதிவேக ரயில் பாதை அமைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கிரேன், ஓடும் ரயில்மீது விழுந்துள்ளது. இதனையடுத்து ரயில் தடம் புரண்டது. தீயும் பரவியது.
மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். ரயிலுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றது.
விபத்து தொடர்பில் முழுமையான விசாரணைக்கு அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் Phiphat Ratchakitprakarn உத்தரவிட்டுள்ளார். குறித்த ரயிலில் 195 பேர்வரை பயணித்துள்ளனர் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.





