ஜெர்மனியில் தஞ்சமடைந்தவர்கள் நாடு கடத்தப்படும் அபாயம்
ஜெர்மனியில் தேவாலயம் ஒன்றில் தஞ்சமடைந்தவர்கள் நாடு கடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மனியில் அகதி விண்ணப்பம் மேற்கொண்டவர்களுடைய அகதி விண்ணப்பங்களை ஜெர்மனியின் அகதிகளுக்கான அமைப்பானது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் இந்த அகதிகளுடைய அகதி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் பட்சத்தில் சிலர் இந்த நாட்டில் உள்ள தேவாலயங்களில் அகதி அந்தஸ்து கோரி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இது வரை காலமும் அதாவது 1998 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை இவ்வாறு தேவாலயங்களில் அகதி விண்ணப்பங்கள் கோரியவர்களை குறித்த அலுவலகமானது நாடு கடத்தவில்லை.
இந்நிலையில் தற்பொழுது முதற்தடவையாக நீடசக்சன் மாநிலத்தில் உள்ள சென் மிக்கேல் தேவாலயத்தில் அடைக்கலமடைந்த ரஷ்ய நாட்டு பிரஜைகள் மீண்டும் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஸ்பானிய நாட்டில் இருந்து ஜெர்மன் நாட்டுக்கு வந்து இந்த ரஷ்ய பிரஜைகள் அகதி விண்ணப்பம் மேற்கொண்டதாகவும், ரஷ்ய அரச படைகளில் சேர்ந்து உக்ரைக்கு எதிராக தாம் போராடவில்லை என்ற காரணத்தினால் தான் அந்த நாட்டில் துன்புறுத்தப்பட்டதாகவும், அவர்கள் ஜெர்மன் நாட்டில் தமது அகதி விண்ணப்பத்துக்கான காரணத்தை தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.