$340 பில்லியன்களை தாண்டிய சொத்து மதிப்பு : கணிக்க முடியாத இடத்தை பிடித்த மஸ்க்!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றிப்பெற்ற நிலையில், எலான் மஸ்கின் சொத்து மதிப்பு $70 பில்லியன் ஊக்குவிப்புடன் கணிக்க முடியாத இடத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டெஸ்லாவின் பங்குகள் உயர்ந்து வருகின்றன, அவருடைய AI நிறுவனமான xAI உயர்ந்து வருகிறது.
அத்துடன் மஸ்கின் புதிய முயற்சிகள் மற்றும் அரசியல் செல்வாக்கு என்பன அவரை உலகின் மிக உயர்ந்த பணக்காரராக உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் படி, அவரது நிகர மதிப்பு $340 பில்லியனைத் தாண்டியதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.





