இலங்கைக்கு 350 மில்லியன் டொலர் வழங்க ஒப்புக் கொண்ட ஆசிய அபிவிருத்தி வங்கி!

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கையின் ஸ்திரத்தன்மைக்காக சிறப்பு கொள்கை அடிப்படையிலான கடனுக்கு இன்று (29) ஒப்துல் அளித்துள்ளது.
சிறப்பு கொள்கை அடிப்படையில் 350 மில்லியன் டொலரை ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கவுள்ளது.
இது குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த திட்டமானது சர்வதேச நாணய நிதியத்தின் நாட்டிற்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதியால் தொகுக்கப்பட்ட நிதி உதவியின் ஒரு பகுதியாகும் எனத் தெரிவித்துள்ளது.
அத்துடன் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், பொருளாதார மீட்சி மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
(Visited 37 times, 1 visits today)