Asia Cup – பாகிஸ்தான் அணி அதிரடி வெற்றி
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர்-4 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் -வங்காளதேசம் மோதின . இப்போடியில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இதனை தொடர்ந்து அந்த அணியின் தொடக்க வீரர்களாக முகமது நயிம், மெஹிதி ஹசன் களமிறங்கினர்.
ஹசன் (0) ரன் எதுவும் எடுக்காமலும், நயிம் 20 ரன்னிலும் அவுட் ஆகினர். பின்னர் வந்த வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர்.
ஆனால், சற்று நிலைத்து நின்று ஆடிய கேப்டன் சகீப் அல் ஹசன் 53 ரன்களையும், முஷ்பிகூர் ரஹிம் 64 ரன்களையும் சேர்ந்ததனர்.
இறுதியில் வங்காளதேசம் 38.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சிறப்பாக பந்துவீசிய பாகிஸ்தான் வீரர் ஹரிஸ் ரவுல்ப் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கி விளையாடி யது.
தொடக்கத்தில் பகர் ஜமான் 20 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் பாபர் அசாம் 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.மறுபுறம் இமாம் உல் ஹக் நிலைத்து ஆடினார்.
தொடர்ந்து முகமது ரிஸ்வான் , இமாம் உல் ஹக் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர், தொடர்ந்து சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.
இதனால் 39.3 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்தது. இமாம் உல் ஹக் 78 ரன்களும் , முகமது ரிஸ்வான் 63 ரன்களும் எடுத்தனர்,
இதனால் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.