Asia Cup M09 – 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி

17வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.
இந்த தொடரில் இதுவரை 8 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்த ஆட்டங்களின் முடிவில் சூப்பர் 4 சுற்றுக்கு இந்திய அணி மட்டும் தகுதி பெற்றுள்ளது.
இதில் இன்று நடைபெற்ற 9வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து வங்காளதேச அணியின் தொடக்க வீரர்களாக சைப் ஹாசன் மற்றும் தன்சித் ஹசன் தமீம் ஆகியோர் களம் கண்டனர்.
இதில் சைப் ஹாசன் 30 ரன்களில் அவுட் ஆனார். தொடர்ந்து களம் கண்ட கேப்டன் லிட்டன் தாஸ் 9 ரன்னில் அவுட் ஆனார். மறுபுறம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய தன்சித் ஹசன் தமீம் அரைசதம் அடித்த நிலையில் 52 ரன்களில் அவுட் ஆனார்.
இறுதியில் வங்காளதேச அணி 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 154 ரன்கள் எடுத்தது. வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக தன்சித் ஹசன் தமீம் 52 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 155 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அடல் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் வங்காளதேச அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.