விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டில் திடீர் ஓய்வை அறிவித்த அஸ்வின் – ரசிகர்கள் அதிர்ச்சி

இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரும், தமிழக வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அவரை விராட் கோலி கட்டி அணைத்து நீண்ட நேரம் பேசினார். ஆஸ்திரேலிய சுழற் பந்துவீச்சு ஜாம்பவான் நாதன் லியோன் அவரை உருக்கமாக வாழ்த்தினார்.

பிரிஸ்பேனில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங் மழையால் பாதிக்கப்பட்ட போது ஆஸ்திரேலிய ஊடகவியலாளர்கள் சிலர் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று வெளியாக உள்ளது என பதிவிட்டு இருந்தனர்.

அதை தொடர்ந்து இந்திய அணியின் ஓய்வறையில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வினை கட்டியணைத்து அவருடன் நின்று நீண்ட நேரம் பேசினார். அதன் பின்னர் தோள்களில் கை போட்டு அமர்ந்திருந்தார். அடுத்து அஸ்வின், ஜடேஜாவை சந்தித்து தனது ஓய்வு முடிவை கூறினார்.

ஜடேஜா மற்றும் அஸ்வின் இணை பிரியாமல் பல போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு இருந்த நிலையில் அவரும் இந்த செய்தியால் சோகமானார். அதன் பின் ஆஸ்திரேலிய சுழற் பந்துவீச்சு ஜாம்பவான் நாதன் லியோனை சந்தித்து தனது ஓய்வு முடிவை கூறினார் அஸ்வின்.

நாதன் லியோன் மற்றும் அஸ்வின் இடையே டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்துவதில் போட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

பலமுறை நாதன் லியோன் அஸ்வினை பாராட்டி பேசி இருக்கிறார். அஸ்வின் தனக்கு நிறைய கற்றுக் கொடுத்து இருப்பதாகவும் கூட அவர் குறிப்பிட்டு இருந்தார். பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் அமர்ந்து தனது ஓய்வு முடிவை அறிவித்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

பின்னர் ரோஹித் சர்மாவை கட்டி அணைத்து விடை பெற்றார். அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 537 விக்கெட்கள் மற்றும் 3503 ரன்கள் குவித்துள்ளார். 37 முறை ஐந்து விக்கெட் ஹால் சாதனையை செய்துள்ளார். 6 டெஸ்ட் சதங்கள் அடித்து இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர் ஆவார்.

SR

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!