ஆஷஸ் தொடர் – முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பிரபல ஆஷஸ்(Ashes) தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று ஆரம்பமானது.
அந்தவகையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி பெர்த்(Perth) மைதானத்தில் ஆரம்பமானது.
நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 32.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 172 ஓட்டங்களை பெற்றது.
இங்கிலாந்து அணி சார்பில், ஒலி போப்(Ollie Pope) 46 ஓட்டங்களும் ஹார்ரி ப்ரூக்(Harry Brook) 52 ஓட்டங்களும் பெற்றனர்.
பந்து வீச்சில் ஆஸ்திரேலியா அணி சார்பில், சிறப்பாக பந்து வீசிய மிச்சேல் ஸ்டார்க்(Mitchell Starc) 7 விக்கெட்களை கைப்பற்றினார்.
அதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த ஆஸ்திரேலிய அணி 42.5 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்களையும் இழந்து 132 ஓட்டங்களை பெற்றது.
ஆஸ்திரேலிய அணி சார்பில், டிராவிஸ் ஹெட்(Travis Head) 21 ஓட்டங்களும் கேமரூன் கிரீன்(Cameron Green) 24 ஓட்டங்களும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில், பென் ஸ்டோக்ஸ்(Ben Stokes) 5 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
அந்தவகையில், 40 ஓட்டங்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி 34.4 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்களையும் இழந்து 164 ஓட்டங்களை பெற்று 204 ஓட்டங்கள் முன்னிலை வகித்தது.
இங்கிலாந்து அணி சார்பில் ஒலி போப்(Oli Pope) 33 ஓட்டங்களும் கஸ் அட்கின்சன்(Gus Atkinson) 37 ஓட்டங்களும் பெற்றனர்.
இந்நிலையில், 205 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட்(Travis Head) இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை சூறையாடினர்.
அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 83 பந்துகளில் 123 ஓட்டங்கள் பெற்று அதிவேக சதம் அடித்து அசத்தினார். அவருடன் இணைந்து மார்னஸ் லெபுசென்(Marnus Labuschagne) 51 ஓட்டங்கள் பெற்றுக்கொடுத்தார்.
5 நாள் விளையாடப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டி இரண்டே நாட்களில் முடிவடைந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.




