கிராமி விருது விழாவில் குடியேற்ற முகவர்களுக்கு எதிராக முழங்கிய கலைஞர்!!
அமெரிக்காவில் குடியேற்ற முகவர்களுக்கு எதிராக பல கலைஞர்கள் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
அந்தவகையில் கிராமி விருதுகளில் சிறந்த இசை ஆல்பத்திற்கான விருதை பெற்றுக்கொண்ட பாடகர் பேட் பன்னி (Bad Bunny), மேடையில் பேசும்போது கூட்டாட்சி முகவர்களின் செயற்பாட்டை விமர்சித்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், கடவுளுக்கு நன்றி சொல்வதற்கு முன், நான் ‘ஐஸ் அவுட்’ என்று சொல்லப் போகிறேன்.
“இந்த நாட்களில் வெறுப்பு இல்லாமல் இருப்பது கடினம் என்று எனக்குத் தெரியும். வெறுப்பை விட சக்தி வாய்ந்தது அன்பு மட்டுமே. நாம் வித்தியாசமாக இருக்க வேண்டும்.
நாம் அவர்களை வெறுக்கவில்லை, நம் மக்களை நேசிக்கிறோம், நம் குடும்பத்தை நேசிக்கிறோம், அதைச் செய்வதற்கான வழி அதுதான். தயவு செய்து அதை மறந்து விடாதீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே பொழுதுபோக்குத் தேர்வை கடுமையாக விமர்சித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




