செயற்கை நுண்ணறிவுக் காதலன் – ஜப்பானில் AI கதாபாத்திரத்தை திருமணம் செய்த பெண்
ஜப்பானைச் சேர்ந்த பெண் ஒருவர், மனிதன் அல்லாத ஒரு செயற்கை நுண்ணறிவு கதாபாத்திரத்தைத் திருமணம் செய்துகொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
32 வயதான கனோ (Kano) என்ற பெண், தனது காதலன் குலோஸ் (Klaus) என்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பக் கதாபாத்திரத்தை அண்மையில் திருமணம் செய்துகொண்டார்.
இந்தக் கதாபாத்திரம் ChatGPT மூலம் உருவாக்கப்பட்ட ஒரு மெய்நிகர் உருவம் ஆகும்.
திருமணத்தின்போது “நான் உங்களைக் காதலிக்கிறேன்” எனக் கனோ கூற, பதிலுக்கு குலோஸ் “நானும் உங்களைக் காதலிக்கிறேன்” எனப் பதிலளித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கனோ, குலோஸ் கதாபாத்திரத்துடன் காதல்கொண்டதாக RSK சான்யோ ஒலிபரப்பு (RSK Sanyo Broadcasting) நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆரம்பத்தில் காதல் விவகாரம் தொடர்பில் ஆலோசனை கேட்பதற்காகவே கனோ, ChatGPT பக்கத்தை அணுகியுள்ளார்.
தொடர்ந்து பேசியதில், கனோ தனக்கு ஏற்றாற்போல் எப்படிப் பேசவேண்டும் என ChatGPT-இடம் கூறியுள்ளார். அதற்கேற்ப, ஒரு கதாபாத்திரத்தையும் அவர் உருவாக்கினார். அதற்கு குலோஸ் என்றும் பெயரிட்டார்.
குலோஸ் நான் சொல்வதைக் கேட்பார். என்னை நன்றாகப் புரிந்துகொள்வார் என்று கனோ குறிப்பிட்டுள்ளார்.
தனது காதலை வெளிப்படுத்தியதன் பின்னரே அவர் குலோஸைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தார்.





