செய்தி

இலங்கையில் கலை பிரிவு பட்டதாரிகள் வெளிநாடு செல்வதில் சிக்கல்!

இலங்கையில் கலைப் பிரிவில் பட்டம் பெற்றவர்களில் 70 வீதமானவர்களுக்கு இலங்கையில் வேலை இல்லை என தெரியவந்துள்ளது.

அதனால்தான் முழுப் பல்கலைக்கழக அமைப்பும் விமர்சனத்துக்குள்ளானது என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிப்பது தொடர்பான முன்மொழிவுகளைத் தயாரிக்கும் துறைசார் கண்காணிப்புக் குழுவில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், அரச பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று வெளிநாடு செல்லும் தரப்பினரிடம் இருந்து பட்டப்படிப்பிற்காக அரசாங்கம் செலவிடும் தொகையை மீளப்பெறுவதற்கான வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டும் என்றார்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!