திமிர்பிடித்த” அமெரிக்கத் தலைவர் தூக்கியெறியப்படுவார் – அலி கமேனி!
தெஹ்ரானில் வளர்ந்து வரும் போராட்டங்களை கட்டுப்படுத்த போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் கடுமையாக தாக்குவேன் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி ( Ayatollah Ali Khamenei ) ட்ரம்ப் “தனது சொந்த நாட்டை நடத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சிக்கு எதிராக மக்கள் தெருக்களில் இறங்கி போராடுவதற்கு எதிராக ஈரான் அரசு நடவடிக்கை எடுக்கும் எனக் குறிப்பிட்ட அவர், ட்ரம்ப் “ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈரானியர்களின் இரத்தத்தால் கறை படிந்தவர் எனவும் விமர்சித்துள்ளார்.
திமிர்பிடித்த” அமெரிக்கத் தலைவர் ஒருநாள் தூக்கியெறியப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“வேறொரு நாட்டின் ஜனாதிபதியை மகிழ்விக்க போராட்டக்காரர்கள் தங்கள் சொந்த தெருக்களை நாசமாக்குகிறார்கள்” என்றும் கமேனி விமர்சித்துள்ளார்.
ஈரானில் போராட்டங்களை கட்டுப்படுத்த இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இருப்பினும் தொடர்ந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் “பயங்கரவாத முகவர்கள் வன்முறையை தூண்டுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.





