பங்களாதேஷ் : ஷேக் ஹசீனாவுக்கு இரண்டாவது முறையாகவும் கைது வாரண்ட் பிறப்பிப்பு!
நாடுகடத்தப்பட்ட முன்னாள் தலைவர் ஷேக் ஹசீனாவுக்கு பங்களாதேஷ் நீதிமன்றம் இரண்டாவது கைது வாரன்ட்டை பிறப்பித்துள்ளது.
இந்த முறை பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டதில் அவர் பங்கு வகித்ததாக குற்றம் சாட்டப்பட்டதாக தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
500க்கும் மேற்பட்டோர் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினரால் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது, சிலர் பல ஆண்டுகளாக இரகசிய வசதிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் “ஷேக் ஹசீனா மற்றும் அவரது ராணுவ ஆலோசகர், ராணுவ வீரர்கள் மற்றும் பிற சட்ட அமலாக்க அதிகாரிகள் உட்பட 11 பேருக்கு எதிராக நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது” என அவர் கூறியுள்ளார்.
முன்னதாக 77 வயதான ஹசீனாவிற்கு மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களின் குற்றச்சாட்டின் பேரில் டாக்கா ஏற்கனவே கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
இதனையடுத்து ஆகஸ்ட் மாதம் மாணவர் தலைமையிலான புரட்சியால் தூக்கியெறியப்பட்ட பின்னர் பழைய நட்பு நாடான இந்தியாவிற்கு தப்பி ஓடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.