பொழுதுபோக்கு

விஜய்யைக் கைது செய்ய வேண்டும்: ஓவியா

நடிகர் விஜய்யைக் கைது செய்ய வேண்டும் என நடிகை ஓவியா தெரிவித்துள்ளார்.

விஜய் கரூரில் பரப்புரையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட மிக மோசமான நெரிசலில் 40 பேர் பலியானது மாநிலத்தையே உலுக்கியுள்ளது.

பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சமும் த.வெ.க. சார்பில் விஜய் ரூ. 20 லட்சமும் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், நடிகை ஓவியா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘விஜய்யைக் கைது செய்யவும் (Arrest vijay)’ எனக் கூறியிருந்தார்.

இதனைக் கண்ட த.வெ.க. தொண்டர்கள் ஓவியாவைக் கடுமையான வார்த்தைகளால் தாக்க, சில நிமிடங்களிலேயே அப்பதிவை நீக்கிவிட்டார்.

ஆனால், ஓவியாவின் பழைய பதிவுகளுக்குச் சென்ற விஜய் ரசிகர்கள் அவரை ஆபாசமாகத் திட்டி வருகின்றனர். இவற்றை ஸ்க்ரீன் ஷாட் (screen shot) எடுத்த ஓவியா ஒவ்வொன்றையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!