செய்தி

புனித நகரில் ஈரான் உச்ச தலைவரின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு!

ஈரான் உச்ச தலைவரின் உடல், ஈரானின் புனித நகரமான மஷாத்தில் அடக்கம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேலின் கூட்டு தாக்குதலில் கொல்லப்பட்ட கமெனியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க ஈரான் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் மஷாத் நகரில் திரண்டுள்ளனர்.

ஈரானின் உயர்மட்டத் தலைவர்கள், இராணுவத் தளபதிகள் , அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டுத் தூதர்கள் முன்னிலையில் முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.

போருக்கு மத்தியிலும் இதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.

அதேவேளை, தலைநகர் தெஹ்;ரானில் அயதுல்லா அலி கமெனிக்கு பெரிய பிரியாவிடை விழா நடைபெறும் என்று ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்து உள்ளது.

இறுதிச்சடங்கு நடைபெறும் திகதி பற்றிய உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!