கல்கிரியாகமவில் மீன்பிடிக்கச் சென்ற இராணுவ வீரர் சடலமாக மீட்பு!

இதிகொல்லாகம ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இராணுவ வீர்ர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கல்கிரியாகம – இகல உல்பொத்த பிரதேசத்தை சேர்ந்த விக்ரமகே சமன் குமார ஜயவீர ( 40) என்ற இராணுவ சிப்பாயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இராணுவ வீரர் முல்லைத்தீவு பகுதியிலுள்ள இராணுவ முகாமில் ஒன்றில் கடமையாற்றுபவர் எனவும் விடுமுறையில் வீட்டுக்கு வருகை தந்த போதே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த இராணுவ வீரர்சிப்பாய் இதிகொல்லாகம ஏரிக்கு மீன்பிடிக்கச் சென்றதாகவும், ஆனால் அன்றிரவு அவர் வீடு திரும்பவில்லை எனவும் அவரது சகோதரர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
(Visited 10 times, 1 visits today)