எதிர்க்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக அர்ஜென்டினாவின் ஒரே தேசிய ஊடகம் மூடல்

எதிர்க்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக அர்ஜென்டினாவில் இருந்த ஒரே தேசிய ஊடகத்தை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
அர்ஜென்டினாவில் உள்ள ஒரே தேசிய ஊடக நிறுவனம் டெலம். ஆனால் சமீபகாலமாக இதன் மீது, முன்னாள் அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கிர்ச்னரின் கொள்கைகளை ஊக்குவித்து அவரது முகவராக செயல்படுவதாகவும், ஆளுங்கட்சிக்கு எதிராக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வந்தது. எனவே இந்த நிறுவனத்தை தனியார் மயமாக்க அரசாங்கம் திட்டமிட்டது.
இந்தநிலையில் அரசாங்கத்தின் ஒரே தேசிய ஊடகமான டெலமை விரைவில் மூட உள்ளதாக அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலே தெரிவித்துள்ளார்.அதிபரின் இந்த அறிவிப்பு அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
(Visited 19 times, 1 visits today)