பிரித்தானியாவில் வாடகைக்கு குடியிருப்பவர்களா நீங்கள் : உங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர செய்தி!

பிரித்தானியாவில் வீட்டு வாடகை மீண்டும் உயர்ந்துள்ளது. இதன்படி ஒரு மாதத்திற்கு £1,213 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் வாடகை வீட்டொன்றின் மாதாந்த கட்டணமாக £1,199 பவுண்ட்ஸ் அறவிடப்பட்டது. இது கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், 1.2 வீத அதிகரிப்பை குறிக்கிறது.
இந்த அதிகரிப்பானது குத்தகைதாரர்கள் மற்றும் நில உரிமையாளர்கள் இருவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாடகைதாரர்கள் தங்கள் வாடகையைச் செலுத்த சிரமப்படுவார்கள் எனவும் வாடகை உத்தரவாதக் காப்பீட்டைக் கருத்தில் கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வாடகை வீடுகளின் அடிப்படையில் பிரித்தானியாவில் லண்டனில் தான் அதிகளவு வாடகை வசூலிக்கப்படுகிறது. அங்கு குத்தகைதாரர்கள் மாதத்திற்கு £2,039 செலுத்துகிறார்கள்.
மலிவான இடம் இங்கிலாந்தின் வடகிழக்கு பகுதியில் காணப்படுகிறது. அங்கு £632 பவுண்டுகளுக்கு வீட்டினை பெற்றுக்கொள்ளலாம்.