லிப்ஸ்டிக் பயன்படுத்துபவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு
பெண்களின் அழகுக்கு அழகு சேர்ப்பது அவர்களின் உதடு தான். எனவே பெண்கள் தங்களது உதடுகளை மிகவும் அழகாக வைத்திருக்க வேண்டும் என்று தான் விரும்புவர். அந்த வகையில், இன்று பெரும்பாலான பெண்கள் தங்களது உதட்டில் லிப்ஸ்டிக் பூசும் பழக்கத்தை வழக்கமாக வைத்துள்ளனர்.
லிப்ஸ்டிக் போடுவது அவர்களுக்கும், வெளியில் பார்ப்பவர்களுக்கும் அழகாக தெரிந்தாலும், அது சருமத்திற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்க கூடியது. தற்போது இந்த பதிவில் லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி பார்ப்போம்.
தீமைகள்
லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் உதடுகள் வறட்சி அடைந்து, உதட்டில் வெடிப்பு ஏற்படலாம். சில லிப்ஸ்டிக் ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தி, இது அரிப்பு, சிவத்தல் மற்றும் வீக்கம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். லிப்ஸ்டிக் பொதுவாக பல ரசாயனங்களை பயன்படுத்துகின்றன.
இது சரும மற்றும் உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். லிப்ஸ்டிக்கில் பயன்படுத்தப்படும் லெட் என்ற பொருள், புற்று நோயை கூட ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தீமைகளைக் குறைக்க சில வழிகள்
இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தலாம். இது குறைவான ரசாயனங்களைக் கொண்டுள்ளது. உதடுகளுக்கு நிறம் சேர்க்க விரும்பினால், இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தலாம், எடுத்துக்காட்டாக திராட்சைப்பழ விதைகளிலிருந்து பெறப்பட்ட லிப்ஸ்டிக் என இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தலாம்.