அடிக்கடி குளிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு
பொதுவாக மனித வாழ்வில் இன்றியமையாதது மற்றும் நம் வாழ்க்கையில் ஒன்றியதுமானது குளியல். இந்த குளியல் பல வகையில் உள்ளது. தினம்தோறும் குளியல் எண்ணெய் குளியல், சூரிய குளியல், நீராவி குளியல், மண் குளியல் என உள்ளது. இந்தப் பதிவில் நாம் தினந்தோறும் குளியல் பற்றியும் எவ்வளவு நேரம் குளிக்க வேண்டும் என்பதைப் பற்றியும் தலைக்கு குளிக்கும் முறை பற்றியும் அறிந்து கொள்வோம்.
குளியல் என்பது உடலை சுத்தம் செய்வதாகும். தினமும் குளிக்க வேண்டுமா என்பது அவரவர் சுற்றுச்சூழல் மற்றும் சூழ்நிலைக்கேற்ப மாறுபடும். உடல் சோர்வு வியர்வை நாற்றம் போன்ற காரணங்கள் மற்றும் வேலை பளு காரணமாகவும் குளிப்பது அவசியமாகும். காலையில் எழுந்தவுடன் குளிப்பது என்பது மிகவும் நல்லது. ஏனென்றால் நம் உடலில் வெப்பம் தணியும். உதாரணமாக வீட்டை விட்டு வெளியே செல்லும்போதும் வெளியில் இருந்து வீட்டுக்கு வரும்போதும் குளிப்பது மிகவும் அவசியமாகும். ஒரு நாளில் இரு முறை குளிப்பது என்பது அவசியம் இல்லை. ஆனால் ஒருவர் கடினமான வேலைகளை செய்கிறார் என்றால் குளிக்கலாம். மேலும் உடல் அசுத்தமாக இருந்தால் குளிப்பது நல்லது.
எவ்வளவு நேரம் குளிக்க வேண்டும் தெரியுமா?
காலை நேர குளியல் என்பது மிக குறுகிய நேரத்தில் குளித்து முடித்து விட வேண்டும். நீண்ட நேரம் குளிக்க கூடாது. குறிப்பாக உடலை நீண்ட நேரம் தேய்க்க கூடாது.
மாலை நேரம் 15 – 20 நிமிடம் வரை குளிக்கலாம். குறிப்பாக உட்கார்ந்து குளிப்பது உடலுக்கு நல்ல ஒரு ரிலாக்ஸை கொடுக்கும். அதிலும் பத்மாசனம் போட்டு குளிப்பது இன்னும் சிறந்ததாகும்.
தலைக்கு குளிக்கும் முறை:
தினமும் தலைக்கு குளிப்பது உடல் நலத்திற்கு நல்லதாகும். நம் உடலின் வெப்பம் சீராக செயல்படும் மற்றும் வெப்பம் தணியும். தலைக்கு குளிக்கும் முன் முதலில் கால் பகுதியை தான் நனைக்க வேண்டும். பிறகுதான் தலையில் தண்ணீரை ஊற்ற வேண்டும். ஏனென்றால் முதலிலேயே தலைக்கு தண்ணீர் ஊற்றினால் உடல் சூடு உள்ளே தான் இருக்கும். முதலில் காலிலே ஊற்றும் போது உடல் வெப்பம் அனைத்தும் காது, கண்,மூக்கு வழியாக வெளியேறிவிடும் இதுவே சரியான முறையாகும்.
தலைமுடியை மிகவும் கடினமான முறையில் தேய்க்க கூடாது தண்ணீரை மற்றும் ஊற்றி கழுவ தான் வேண்டும். அழுக்கு இல்லை என்றால் வாரத்திற்கு ஒரு முறை குளிப்பது போதுமானதாகும். அடிக்கடி தலை குளித்தால் முடி கொட்டும் அல்லது தலைக்கு குளிக்காமல் இருந்தால் முடி கொட்டாது என்று நினைப்பது மிகவும் தவறு. நாம் அழுத்தி தேய்த்தால் மட்டுமே முடி கொட்டும். அப்படி இருந்தும் சின்ன சின்ன முடிகள் கொட்டத்தான் செய்யும். தலைக்கு குளிப்பதால் தான் கொட்டுகிறது என்பது தவறு.
தலை முடிக்கு கெமிக்கல் கலந்த ஷாம்புகளை தவிர்க்க வேண்டும். குறிப்பாக ஷாம்புகளில் பால் சத்து உள்ளது முட்டை சத்து உள்ளது என விளம்பரங்களில் கூறுவார்கள். இரண்டு நிமிடம் போட்டுக் குளிக்கும் ஷாம்புவின் சத்தை முடி எப்படி உறுஞ்சி கொள்ளும் நாம் யோசிக்க வேண்டும்.
பொதுவாக நம் உண்ணக்கூடிய உணவு ஜீரணமாகி அது ரத்தத்தில் கலந்து பின் முடிக்கு அனுப்பும். அந்த சத்துக்களை முடியின் வேர் பகுதிகள் உறிஞ்சும். அப்படி இருந்தும் போதுமான சத்துக்கள் கிடைப்பதில்லை. இரண்டு நிமிடம் முடிக்கு மேல் தடவும் ஷாம்புவின் சத்தை எப்படி முடி உறிஞ்சும் என்பதை நாம் யோசிக்க வேண்டும்.
ஷாம்பு என்பது முடியின் அழுக்கை நீக்கவும் என்னைப் பசையை நீக்கவும் பயன்படும். ஆகவே இயற்கை முறையில் தயாரிக்கப்படும் சீயக்காய் மற்றும் கடலை மாவு பயன்படுத்துவது சிறந்ததாகும். சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் கலந்த சோப்பை பயன்படுத்துவது நல்லது. ஏனென்றால் நம் தோலுக்கு எண்ணெய் பசை மிகவும் அவசியமானது.
ரசாயனம் கலந்த சோப்புகளை பயன்படுத்தும்போது அது நம் தோளில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி விரைவில் தோலை சுருங்க செய்யும். இதனால் வயதானவர் போல் தோற்றம் காணப்படும். ஆகவே குளியல் என்பது மிகவும் நல்லதாகும். அது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியை கொடுக்கக் கூடியது. அதை நாம் பிடித்த நேரத்தில் குளித்தால் இன்னும் சிறந்ததாகும்.