உலகம் செய்தி

இரகசியமாக நிலத்திற்கு அடியில் அணுவாயுதங்களை சோதனை செய்யும் ரஷ்யா, சீனா?

ரஷ்யாவும், சீனாவும் யாரும் அறியாத வகையில் நிலத்திற்கு அடியில் அணுவாயுத சோதனைகளை நடத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இவ்வாறான அணுவாயுத சோதனைகளை அமெரிக்காவும் நடத்தும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

CBS இன் 60 நிமிட நிகழ்ச்சிக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மையில் ரஷ்யா நீருக்கடியில் பியூரெவெஸ்ட்னிக் (Burevestnik) ஏவுகணையை சோதனை செய்தது. இதனைத் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு பின் ஏவுகணை சோதனையை நடத்துமாறு ட்ரம்ப் தனது துருப்புகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இந்த சூழ்நிலையில் இது தொடர்பில் நெறியாளர் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பினார். குறிப்பாக வடகொரியாவை தவிற வேறு எந்த நாடுகளும் அணுவாயுத சோதனைகளை செய்யவில்லை.

ரஷ்யாவும், சீனாவும் முறையே 1990 மற்றும் 1996 முதல் இது போன்ற சோதனைகளை நடத்தவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த ட்ரம்ப்,  “இது ஒரு பெரிய உலகம், அவர்கள் எங்கே சோதனை செய்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியாது. அவர்கள் நிலத்திற்கு அடியில் சோதனை செய்யலாம். நீங்கள் சில அதிர்வுகளை மட்டுமே உணர்வீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 1996 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா விரிவான அணுசக்தி சோதனை தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது இராணுவ அல்லது சிவில் நோக்கங்களுக்காக அனைத்து அணு சோதனை வெடிப்புகளையும் தடை செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 4 times, 5 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!