இலங்கை

இலங்கையில் போலியான முட்டைகள் விற்பனை செய்யப்படுகிறதா? : நுகர்வோர் அதிகார சபை வெளியிட்ட தகவல்!

இலங்கையில் அண்மைக்காலமாக முட்டைகளுக்கு தட்டுப்பாடு, விலை உயர்வு என பல்வேறு பிரச்சினைகள் நிலவியது.

இந்நிலையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் குறித்து தவறான கருத்து ஒன்று பரவி வருகிறது.

அதாவது செயற்கை முட்டைகள் (இறப்பர் முட்டைகள்) விற்பனை செய்யப்படுவதாக தகவல் பரவி வருகிறது. இது குறித்து நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில்,  போலி பிளாஸ்டிக் அரிசி இருப்பதாக பரப்பப்படும் பிரசாரம் போன்று இதுவும் பொய்யான செய்தி என்பதால் முட்டையை உட்கொள்வதில் மக்கள் அச்சப்பட வேண்டாம் என அதிகாரசபை தெரிவித்துள்ளது.

எனவே, இவ்வாறான பொய்யான செய்திகளுக்கு ஏமாற வேண்டாம் எனவும், இதுபோன்ற தவறுகள் நடந்தால், 1977 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு முறைப்பாடு செய்யுமாறும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவிக்கிறது.

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்